கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த தமிழருவி மணியன் இன்று விஜயகாந்துக்கு நேருக்கு நேர் சவால் ஒன்றை விடுத்துள்ளார். விஜயகாந்துக்கு மக்களின் செல்வாக்கு சுத்தமாக இல்லை என்றும், அவர் வரும் சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் எதில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிட தயார் என்றும், என்னை விட அவர் ஒரு ஓட்டு அதிகமாக வாங்கிவிட்டால் தான் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவதாக சவால் விட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுளது.
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தின் தவறான நடைமுறைகளால் அந்த கட்சிக்கு இருந்த 10 சதவிகித ஓட்டுக்கள் ஐந்து சதவிகிதமாக குறைந்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்குள் அது இன்னும் குறைந்து 2 சதவிகிதமாக மாறிவிடும்
வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் தைரியம் இருந்தால் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கட்டும். அவரை எதிர்த்து நான் சுயேட்சையாக போட்டியிட தயார். என்னைவிட அவர் ஒரு ஓட்டு அதிகமாக வாங்கினாலும் நான் அரசியலில் இருந்து முழுமையாக விலகிவிடுகிறேன். என் சவாலை சந்திக்க விஜயகாந்த் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருக்க விஜயகாந்த்துக்கு தகுதியில்லை. மேலும் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விஜயகாந்த் கட்சியினர்களை கூப்பிடமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.