இன்று காலை முதல் மும்பை பங்குவர்த்தகத்தில் நெட்வொர்க் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தற்காலிமாக மூடப்பட்டது. இதனால் இன்றைய பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சில நிறுவனங்களின் பங்குகளின் விலையில் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப விலையில் மாற்றங்கள் ஏற்படாததையடுத்தே பங்குவர்த்தகம் நிறுத்தப்பட்டதாக மும்பை பங்குவர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குசந்தைக்கு நெட்வொர்க் தொழில்நுட்ப சேவை வழங்கிவரும் HCL நிறுவனம் இந்த தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என்றும் மும்பை பங்குவர்த்தக மையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் தற்செயலாக நடந்ததா? அல்லது சதிவேலையா? என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
இதனால் இன்று பங்குவர்த்தகம் செய்பவர்கள் நிலைமையை அனுசரித்து வர்த்தகத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.