ஷீரடி சாய்பாபாவை இந்துக்கள் வணங்கக்கூடாது. சங்கராச்சாரியாரின் சர்ச்சை பேச்சு.

6ஷீரடி சாய்பாபா அசைவ உணவுகளை சாப்பிட்டவர் என்பதால் அவரை இந்துக்கள் கடவுளாக வழிபடக்கூடாது என  துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி இன்று கூறியுள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் இன்று காலை புதுடெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது, அசைவ உணவு வகைகளை சாப்பிட்ட ஒருவரை இந்துக்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டதில்லை. அவர்களை வழிபடுவதும் இல்லை. ஷிரடி சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர் என்பதால் அவரை இந்துக்கள் வழிபடக்கூடாது.

இந்து கடவுள் புகைப்படங்களுடன் சாய்பாபாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துவாரகா பீடாதிபதி அவ்வாறு வழிபடுபவர்கள் உண்மையான இந்துக்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்றும் பேசியுள்ளார்.

துவாரகா பீடாதிபதி ஸ்வரூபானந்த் சரஸ்வதியின் இந்த பேச்சு  நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இந்த பேச்சுக்கு அலகாபாத் நீதிமன்றத்தில், சாய்பாபா கோவில் நிர்வாகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1s5IRSq” standard=”http://www.youtube.com/v/DBT92PbdAF0?fs=1″ vars=”ytid=DBT92PbdAF0&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep8845″ /]

Leave a Reply