இந்தியாவில் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்திய -இலங்கை உறவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றது. இந்நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தியாவுடன்பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அடுத்த வாரம் டெல்லி வருகிறார்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் நலன் மற்றும் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து அவருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சகம், இந்தியாவில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 175 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.