இந்திய பிரதமராக பொறுப்பேற்றவுடன் நரேந்திரமோடி முதல்முறையாக இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இன்று காலை ஜம்மு விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை மாநில ஆளுனர் என்.என்.வோரா, முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்
ஜம்முவில் இன்று கத்ரா – உதம்பூர் இடையே ரயில்போக்குவரத்தை அவர் துவங்கி வைத்தார். இந்த விழாவில் பிரதமர் பேசியதாவது:
“ரூ.1,150 கோடி செலவில் இந்த ரயில் சேவை உருவாகி உள்ளது. இதன்மூலம் சாமான்ய மக்களும் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் வசதி கிடைக்கிறது.
ஜம்மு – கத்ரா ரயில் சேவைக்கு ஸ்ரீசக்தி எக்ஸ்பிரஸ் என பெயரிடலாம். ஜம்மு – காஷ்மீரில் மேலும் பல புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரயில்வே துறையில் சூரியஒளி மின்சக்தி அதிக அளவில் பயன்படுத்தப்படும்.
ஜம்மு வளர்ச்சி ஒருபோதும், எவ்வகையிலும் பாதிக்கப்படாது. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தவர் ஒவ்வொருவர் மனதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்பதே எங்களது இலக்கு.
இம்மாநிலம் ஏற்கெனவே நிறைய பிரச்சினைகளை சந்தித்துவிட்டது. இனி இங்கு வளர்ச்சியும், அமைதியும் நிலைத்திட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/VoQ19C” standard=”http://www.youtube.com/v/jwaKt3VjtKg?fs=1″ vars=”ytid=jwaKt3VjtKg&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4235″ /]