குவீன் ரீமேக்கில் நடிக்க சமந்தா மறுப்பு. தியாகராஜன், பிரசாந்த் அதிர்ச்சி

encriptthumb.phpபாலிவுட்டில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற குவீன் திரைப்படத்தை தென்னிந்தியாவின் நான்கு மொழிகளில் எடுக்கும் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜnன் வாங்கி வைத்துள்ளார். தன்னுடைய மகன் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க பிரபல நடிகைகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் என்பதால் இதில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா மற்றும் இலியானா ஆகியோர் போட்டியில் இருந்தனர். இந்நிலையில் இந்த வாய்ப்பு சமந்தாவுக்கு கிடைக்கும் நிலை வந்தது. இருப்பினும் தென்னிந்தியாவிற்கு தகுந்த மாதிரி திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்தால் மட்டுமே இந்த படத்தில் தன்னால் நடிக்கமுடியும் என சமந்தா கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு தியாகராஜன் சம்மதிக்கவில்லை என்றும் கோலிவுட்டில் ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

ஆனால் உண்மையில் சமந்தா இந்த படத்தில் நடிக்க இரண்டு கோரிக்கைகள் வைத்ததாக தெரிகிறது. நான்கு மொழிகளிலும் நடிக்க மொத்தமாக ரூ.5 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும், பிரசாந்துக்கு பதில் வேறு ஹீரோவை ஒப்பந்தம் செய்யவேண்டும் என்றும் சமந்தா கோரிக்கை விடுத்ததாகவும், சமந்தாவின் கோரிக்கை தியாகராஜனுக்கு ஆத்திரத்தை கிளப்பியதாகவும் கூறப்படுகிறது. விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் மார்க்கெட் இல்லாத பிரசாந்துடன் நடிக்கவேண்டாம் என அவரது நட்பு வட்டாரங்கள் சமந்தாவுக்கு ஆலோசனை கூறியதாகவும் தெரிகிறது. இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதால் தியாகராஜன், பிரசாந்த் வட்டாரம் சமந்தா மீது கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதைப்படி பிரசாந்த் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு நிச்சயம் செய்திருந்த பெண்ணை வேண்டாம் என்று கூறிவிட்டு வெளிநாடு சென்றுவிடுவதாகவும், அவரை தேடி தனியாக வெளிநாடு செல்லும் ஒரு பெண்ணின் அனுபவங்கள்தான் கதை என்று கூறப்படுகிறது. பிரசாந்த் மனைவியாக வரும் கேரக்டரில்தான் சமந்தா நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply