மலேசியாவில் 4 விடுதலைப்புலிகள் கைது. இலங்கையில் சதி நடத்த திட்டமா?

 12மலேசியாவில் கடந்த 2 மாதங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அங்கு மேலும் சில எல்.டி.டி.யினர் பதுங்கியிருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளதால் அவர்களை மலேசிய போலீஸார் தேடி வருகின்றனர்.

எல்.டி.டி.இ அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மலேசியாவில் கடந்த மே 15-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் அதே அமைப்பை சேர்ந்த 4 முன்னணி தலைவர்களை மலேசிய போலீஸார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

எனவே மலேசியாவில் எல்.டி.டி.இ. இயக்கத்தை புதுப்பிக்க முயற்சி நடப்பதாக வந்த தகவல்களை அடுத்து மலேசிய போலீஸார் நாடு முழுவதும் உஷார் நிலையில் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் முன்னாள் இலங்கை பிரதமர் சந்திரிகா குமாரதுங்காவை கொலை செய்ய முயற்சித்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மலேசிய அரசு வெளியிடவில்லை.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடுமையான ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இந்த நால்வரும் மலேசியா வந்து அதன்பின்னர் இலங்கைக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டங்கள் தீட்டியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து மலேசிய போலீஸ் ஐ.ஜி. காலித் அபுபக்கர் கூறுகையில், “கைது நடவடிக்கையின்போது, பல்வேறு நாடுகளின் போலி பாஸ்போர்ட்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் குடியேற்றத் துறையின் முத்திரைகள் கைப்பற்றப்பட்டன” என்றார்.

Leave a Reply