நரேந்திரமோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தவுடன் முக்கிய மாநிலங்களில் கவர்னர்களை மாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வந்தது. ஒருசில மாநில கவர்னர்கள் அவர்களாகவே முன்வந்து ராஜினாமா செய்தனர். ஆனால் சில மாநில கவர்னர்கள் ராஜினாமா செய்யாததால், அவர்களை நீக்க மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று குஜராத் மற்றும் மிசோராம் மாநில கவர்னர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். குஜராத்தில் கவர்னராக பணிபுரிந்து வந்த கமலா பெனிவால் அதிரடியாக மிசோராம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அதேபோ மிசோராம் மாநில கவர்னர் அதிரடியாக நாகலாந்து மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.
குஜராத் மாநிலத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை ராஜஸ்தான் மாநில கவர்னர் மார்கரெட் ஆல்வா கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில பெண் கவர்னர்கமலா பெனிவால், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருதபோதே அவருடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தவர்.. இவருடைய கவர்னர் பதவி காலம் வருகின்ற நவம்பர் மாதம்தான் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் திடீரென மிசோராமிற்கு மாற்றப்பட்டுள்ளார். அடுத்தது கேரள கவர்னரையும் சிறு மாநிலம் ஏதாவது ஒன்றிற்கு மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.