விசாரணை அறிக்கையை நவநீதம்பிள்ளையின் ஆசன வாயிலில் சொருகுங்கள். இலங்கை அமைச்சரின் ஆபாச பேச்சு.

srilankaஐ.நா. மனித உரிமையின் விசாரணை அறிக்கையை நவநீதம்பிள்ளையின் ஆசன வாயிலில் சொருகிக்கொள்வதனை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என இலங்கை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அவர்களின் ஆபாசமாக பேச்சால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இலங்கையில் உள்ள ஊவா பரணகம என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திஸாநாயக்க,  எங்களுக்கு எதிராக தீர்மானத்தை  நிறைவேற்றியுள்ள பராக் ஒபாமாவால் ஒன்றும் செய்யமுடியாது. இலங்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எந்த உதவாக்கரை நாட்டினரையும் இலங்கைக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையில் சீனாவும், ரஷ்யாவும் அங்கம் வகிக்கின்றன. ரஷ்யாவும் சீனாவும் இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என உறுதியாக நம்புகிறோம். இதனால் ஒபாமாவின் தீர்மானத்திற்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் ரஷ்யா மற்றும் சீனா, வாக்களிக்கும் நிலையில் இலங்கைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆசன வாயிலில் சொருகிக்கொள்வதனை தவிர வேறு எந்த பயனும் அதற்கு இல்லை” என்று பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சர் ஆபாசமாக பேசியுள்ளார்.

Leave a Reply