[carousel ids=”37109,37110,37111,37112,37113,37114,37115,37116″]
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி பிரேசில் அணியை 7-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று அதிகாலை நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மிக அபாரமாக வெற்றி பெற்றது. ஜெர்மனி மற்றும் அர்ஜெண்டினா அணிகள் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் மோத உள்ளன.
இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் ஆக்ரோஷமாக விளையாடியதால் போட்டி முடிவடைந்த 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடவில்லை. பின்னர் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க 30 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டன. அந்த நேரத்திலும் இரு அணிகளும் கோல்கள் போடாததால், இறுதியில் பெனால்டி ஷுட் முறையில் வெற்றியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.
அர்ஜென்டினா அணிக்கு வழங்கப்பட்ட நான்கு பெனால்டி ஷுட்களையும் வெற்றிகரமாக கோலாக்கியது. ஆனால் நெதர்லாந்து அணி இரண்டை மட்டுமே கோலாக்கியதால் அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரோ அவர்களின் அபாரமாக கோல் தடுப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. ஆட்டநாயகனாக அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரொ தேர்ந்தெடுக்கப்பட்டார்.