: 2014-15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் சிகரெட், பான் மசாலா, குட்கா, எவர்சில்வர் பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் டி.வி., சோப், செருப்பு உள்ளிட்டவை மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2014-15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய சிறப்பு அம்சங்கள் வருமாறு:
* எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக அதிகரிப்பு.
* வைரம், நவரத்தினக் கற்களின் விலை குறையும.
* சோடா பானங்களுக்கு கூடுதலாக 5 சதவிகிதம் உற்பத்தி வரி.
* சோப்புகள் தயாரிப்புக்கான உற்பத்தி வரி குறைக்கப்படும். இதனால், சோப்புகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.
* அச்சு ஊடகங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.
* 19 அங்குலத்துக்கு கீழ் உள்ள எல்சிடி டிவி பேனலுக்கும் சுங்க வரியில் இருந்து விலக்கு. இதனால், டிவிக்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது.
* மெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான சுங்கவரி 5 சதவிகிதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு.
* காற்றாலை, சூரிய ஒளி மின்னுற்பத்தி சாதனங்களுக்கு வரி குறைப்பு.
* சிகரெட் மீதான வரி 12 சதவிகித்தில் இருந்து 16 சதவிகிதமாக உயர்வு. இதனால் இதன் விலைகள் உயர வாய்ப்புள்ளது.
* காலணிகளுக்கான உற்பத்தி வரி 6 சதவிகிதமாக குறைப்பு.
* டிவிகளில் பயன்படுத்தப்படும் பிக்சர் டியூப்புகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு.
* சுங்க வரியில் இருந்து விலக்களிக்கப்படுவதால் டி.வி.க்களின் விலையும் குறைய வாய்ப்பு.
* தொலைத் தொடர்பு உபகரணங்களுக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பு.
வருமான வரி உச்சவரம்பு உயர்வு
* வருமான வரி உச்சவரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.50 லட்சமாக உயர்த்தப்படும்.
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.
. * வீட்டுக் கடன் வட்டிக்கு வழங்கப்படும் வரிச் சலுகை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமானது.
* நேரடி வரிகள் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய திட்டம்.
* உற்பத்தி நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 15 சதவீதம் முதலீட்டு சலுகை வழங்கப்படும்.
* வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2லட்சமாக உயர்வு.
* சேமிப்புக்கான 80 சி பிரிவில் வரி விலக்கு வரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்வு.
* பிபிஎஃப் ஆண்டு திட்ட வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படும்.
கங்கையை தூய்மைப்படுத்த ரூ.2,307 கோடி ஒதுக்கீடு
* டெல்லியில் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.700 கோடி ஒதுக்கீடு.
* பேரிடர் முன்னெச்சரிக்கைக்காக புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.188 கோடி நிதி ஒதுக்கீடு.
* காவல்துறை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* ஆசிய, காமன்வெல்த் போட்டிகளுக்கு பயிற்சி தர ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* உத்தரகாண்டில் தேசிய இமாலய கல்வி மையம் அமைக்கப்படும்.
* ஆந்திரா, தெலுங்கானா மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
* கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக ரூ.2,307 கோடி நிதி ஒதுக்கீடு.
* கங்கை நிதியை சுத்தப்படுத்த வெளிநாடு வாழ் இந்தியர் நிதித்திட்டம் உருவாக்கப்படும்.
தேசிய விளையாட்டு அகடமி
* பல்வேறு பகுதிகளி்ல் விளையாட்டை மேம்படுத்த தேசிய விளையாட்டு அகடமி தொடங்கப்படும்.
* ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு மேம்பாட்டுக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
* காஷ்மீரில் உள், வெளி விளையாட்டு அரங்குகள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்.
* மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்க நடப்பாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* புலம் பெயர்ந்த காஷ்மீர் மக்களின் நலன் காக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* ஜிஎஸ்எல்வி எம்கே 3, பிஎஸ்எல்வி 1, 2 வர்த்தக ரீதியிலான ராக்கெட்டுகள் ஏவப்படும்.
* சாலையார கிராமங்களை மேம்படுத்த ரூ.990 கோடி ஒதுக்கீடு.
* இந்திய உணவு கழகத்தை சீரமைக்க திட்டம்.
நதிகள் இணைப்பு
* நதிகள் இணைப்புக்கு தீவிர முயற்சி எடுக்கப்படும்.
நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ .100 கோடி ஒதுக்கீடு.
* காஞ்சிபுரம் மற்றும் மதுரா உள்ளிட்ட இடங்களில் தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.
பாதுகாப்புத்துறைக்கு ரூ.2.29 லட்சம் கோடி
* பாதுகாப்புத்துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.2.29 லட்சம் கோடி.
* வெளிநாட்டு நிதி உதவியை வரையறைப்படுத்த புதிய வரித் திட்டம்.
* ராணுவ வீரர்களுக்கு பதவிக்கேற்ற வகையில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்.
* மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்.
பெண் குழந்தையின் கல்விக்கு சிறப்பு தி்ட்டம்
* பெண் குழந்தையின் கல்வி, திருமணத்திற்கு உதவும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும்.
* பெண் குழந்தைகளுக்கு சிறப்பு சேமிப்பு தி்ட்டம் தொடங்கப்படும்.
* அனைத்து பணப்பரிமாற்றங்களுக்கு ஒரே டிமேட் கணக்கு.
* புதிதாக 6 கடன் வசூல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.
* பாதுகாப்புத்துறைக்கு கூடுதலாக 5 ஆயிரம் கோடி திட்ட ஒதுக்கீடு.
* பெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கு சிறப்பு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
சூரிய மின்சக்தி திட்டம்
* தமிழ்நாடு, ராஜஸ்தானில் சூரிய மின்சக்தி திட்டம் தொடங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* கிராமப்புற சுகாதாரத்துக்காக 15 மாதிரி ஊரக மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.
* அரசின் அனைத்து அமைச்சகங்களும் மின்னணு முறையில் ஒருங்கிணைக்கப்படும்.
* கூடுதலாக 15 ஆயிரம் கிமீட்டருக்கு நீளத்துக்கு எரிவாயு
* உயர் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் திட்டப்பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* சுரங்க தொழிலை ஊக்கப்படுத்த சுரங்க, கனிமவள சட்டம் திருத்தப்படும்.
* அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை.
* ஒரு குடும்பத்துக்கு இரண்டு வங்கிக் கணக்கு தொடங்கப்படும்.
* வடகிழக்கு மாநிலங்களில் சாலை சீரமைப்புக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
6 மாநிலங்களில் ஜவுளி தொழில் மண்டலம்
* ரூ.200 கோடி முதலீட்டில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஜவுளி தொழில் மண்டலம் அமைக்கப்படும்.
* வருங்கால வைப்பு நிதி கணினி மயமாக்கப்படும்.
* குறுகிய கால ஊரக மறுசுழற்சி நிதித்திட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
* நடப்பு ஆண்டில் 8 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு.
* இந்தாண்டில் புதிதாக 16 துறைமுகங்களை அமைக்க திட்டம்.
* ஏற்கனவே உள்ள துறைமுகங்களை தரம் உயர்த்த ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
* சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு புத்துயிர் தர நடவடிக்கை.
* 7 புதிய தொழில் நகரங்கள் உருவாக்கப்படும்.
* வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
* 2018 ஆம் ஆண்டுக்குள் வங்கிகளுக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கப்படும்.
குறைந்த வட்டியில் வீட்டு கடன்கள்
* குறைந்த வட்டியில் வீட்டு கடன்கள் தர வசதியாக தேசிய வீட்டுவசதி வங்கிக்கு ரூ.4000 கோடி நிதி.
* விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும்.
* நிலங்களுக்கு ஏற்ற பயிர்களை தேர்வு செய்ய மண் பரிசோதனைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* சென்னை- பெங்களூரு தொழிற்பாதை விரிவாக்கப்படும்.
விவசாயிகளுக்காக தனி தொலைக்காட்சி சேனல்
* நிலம் இல்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடனுதவி.
* நகரங்களில் விவசாயிகளே சந்தைகளை அமைக்க ஊக்குவிப்பு.
* விவசாயிகளுக்காக தனி தொலைக்காட்சி சேனல் இந்தாண்டில் அமைக்கப்படும்.
* மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு தேசிய அளவில் வேளாண் சந்தைகள் அமைக்கப்படும்.
* பார்வையற்றோர் எளிதில் அறியும் வகையில் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும்.
* விவசாயத்தில் 4 சதவீதம் வளர்ச்சியை எட்ட இலக்கு.
ரூ.5000 கோடியில் விவசாய கிடங்குகள்
* பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ஒதுக்கீடு.
* விவசாய விளைபொருட்களை பாதுகாக்க ரூ.5000 கோடியில் கிடங்குகள் அமைக்கப்படும்.
* அசாம், ஜார்க்கண்ட்டில் புதிய விவசாய ஆய்வு மையம் உருவாக்கப்படும்.
* நாட்டிலுள்ள முக்கிய சந்தைகளை ஒருங்கிணைக்க புதிய திட்டம்.
* அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* ஆசிரியர் பயிற்சிக்காக புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
* ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
* ஹரியானா மற்றும் தெலங்கானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
* நிர்பயா நிதி மூலம் பெண்கள் பாதுகாப்புக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.
* சமுதாய வானொலி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* பிராட்பேண்ட் மூலம் கிராமங்கள் இணைக்கப்படும்.
அனைவருக்கும் 24 மணி நேரம் மின்சாரம்
* அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது.
* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.33000 கோடி ஒதுக்கீடு.
* கிராமப்புற மின்வசதியை அதிகரிக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
* வங்கிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அளித்து மேலும் பொறுப்புடமையாக்க பரிசீலனை.
* தபால் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டால் உள்ள நிதியை பயன்படுத்துவதை ஆராய குழு.
* நாட்டில் புதிதாக 5 ஐஐடி மற்றும் 5 ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
* அடுத்து 6 மாதங்களில் 9 முக்கிய விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.
* மென்பொருள் தொடர்பான சிறு தொழில் தொடங்குவோருக்கு ஊக்குவிப்பு.
* நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்துத்தர 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை
* 12 புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த நிதியாண்டில் அமைக்கப்படும்.
* மின் விநியோக திட்டங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* ஆந்திர மகாராஷ்டிரா, மேற்கும்வங்கம், உத்தரபிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பல் மருத்துவம், காசநோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும்.
* படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.
* சிறு தொழில் முனைவோரின் திட்டங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.
* வங்கி அல்லாத சேமிப்பாக கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.
* தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.8000 கோடி நிதி ஒதுக்கீடு.
* தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு.
* டெல்லியை போன்று சென்னையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.
* வங்கி அல்லாத சேமிப்பாக கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.
* பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
9 விமான நிலையங்களில் மின்னணு விசா முறை
* சுற்றுலாவை மேம்படுத்த மின்னணு விசா முறை 9 விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும்.
* பயணிகள் வருகை தந்ததும் விசா பெற வசதி செய்யப்படும்.
* வேலைவாய்ப்புக்கு உதவ பயிற்சிகள் அளிக்கும் வகையில் திறன் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* 2019ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.
* தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.50,047 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்து முறை அறிமுகம் செய்யப்படும்.
அந்நிய நேரடி முதலீடுக்கு ஊக்குவிப்பு
* தொழிற்துறையுடன் அடிக்கடி ஆலோசனை நடத்த தனிக்குழு அமைக்கப்படும்.
* குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும்.
* இந்தாண்டு இறுதிக்குள் பொருட்கள், சேவை வரிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
* ராணுவத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 21 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.
* 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7,060 கோடி நிதி ஒதுக்கீடு.
* வரி வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும்.
* வரி வசூலிப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்படும்.
* முதலீட்டாளர்களுக்கு சாதகமான வரிக்கொள்கைகள் உருவாக்கப்படும்.
* பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகதமாக அதிகரிக்கப்படும்.
* காப்பீட்டு்துறையிலும் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக உயர்த்தப்படும்.
* பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்டப்படும்.
* 2018ஆம் ஆண்டுக்குள் வங்கிகளுக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.
* வலுவான இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம்.
* அரசின் செலவினங்களை நிர்வகிக்க தனிக் குழு நியமிக்கப்படும்.
* பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.
* பொருளாதார மந்தநிலை, பிற பொருளாதார நிலைகளிலும் எதிரொலித்தது.
* அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியை 8 சதவீதமாக உயர்த்த இலக்கு.
* நாட்டின் பொருளாதார நிலையை வளர்ச்சி பாதையில் திரும்ப சவாலை ஏற்றுள்ளோம்.
* உற்பத்தி, கட்டமைப்பு முறைகளில் வளர்ச்சியை அதிகரிக்க முன்னுரிமை.
* சர்வதேச பொருளாதார சூழல்களால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
* அரசின் வருவாயை அதிகரிக்க மாற்ற வழிகளை ஆராய வேண்டியுள்ளது.
* ஈராக் உள்நாட்டு போர், எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளளது.
* வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்.
* இந்த அரசு செல்லவிரும்பு பாதையின் அறிகுறியை பட்ஜெட்டில் சொல்ல விருப்பம்.
* மாற்றத்துக்கான ஓட்டளித்து மக்கள் புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர்.
* மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது.
* வேலையின்மை, விலைவாசி உயர்வை இனியும் இந்த நாடு பொறுத்துக் கொண்டு இருக்காது.
* அதிர்ஷ்டவசமாக உலக அளவில் பொருளாதார மாறி வருவது இந்தியாவுக்கு சாதகம்.
மானியத் திட்டங்கள் மறு ஆய்வு
* மானியத் திட்டங்கள் அனைத்தும், குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள்களுக்கான திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்
* புதிய யூரியா கொள்கை வகுக்கப்படும்
* 2017 ஆம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3 சதவீதமாக இருக்கும்
* அனைவருக்கும் 24 மணி நேரம் மின் விநியோகம் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது
* 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க ரூ. 7060 கோடி வழங்கப்படும்
* வரி விதிப்பு முறைகளை திருத்தியமைப்பதன் மூலம் ரியல் எஸ்டேட் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனங்கள் பயனடையும்.
அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மேற்கூறிய அம்சங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
பட்ஜெட் உரை முடிந்தவுடன் நாள் முழுவதும் மக்களவை நடவடிக்கையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
5 நிமிட இடைவெளி விட்ட அருண் ஜெட்லி
முன்னதாக பட்ஜெட் உரையின் இடையே அருண்ஜெட்லி கேட்டுக் கொண்டதன் பேரில் மக்களவை 5 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது இடைவெளி அறிவித்தது இதுவே முதன்முறை என்றும், இதற்கு முன் இவ்வாறு ஒரு முறை கடைபிடிக்கப்பட்டதில்லை என்றும் மூத்த எம்.பி.க்கள் கூறினர்.