பொருளாதாரத்தை சீரமைக்கும். மோடி அரசின் முதல் பட்ஜெட்டுக்கு முதல்வர் பாராட்டு.

4நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்த முதல் மத்திய பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வழிவகை செய்யும் வகையில் உள்ளது என தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்

நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2014-15 பட்ஜெட் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், ”பா.ஜ.க. அரசின் மத்திய பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வழி வகுக்கும் வகையில் உள்ளது. அடுத்த 2, 3 வருடங்களுக்கு வளர்ச்சியை அளிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவும் தெளிவான திட்டம் பட்ஜெட்டில் உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துதற்கு முன்பு மாநில அரசுகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என்பதை வரவேற்கிறேன். அதேபோல், தமிழகத்தில் ஜவுளி மண்டலம் அமைக்கும் முடிவை, பொன்னேரி உள்பட 100 நவீன நகரங்கள் உருவாக்குவதையும் வரவேற்கிறேன்

ஆனால், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக்கூடாது. பட்ஜெட்டில் அறிவித்த பிரெய்லி அச்சகங்களில் ஒன்றாவது தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

100 நாள் வேலைத்திட்டத்தில் வேளாண் பணிகள் சேர்க்க வேண்டும் என்ற எனது பரிந்துரையை ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நதிகள் இணைப்பு பற்றிய ஆய்வை விரைந்து முடிக்க வேணடும். புராதான நகரங்களை மேம்படுத்தும் திட்டத்தில் தமிழகத்திலுள்ள ஸ்ரீரங்கத்தையும் சேர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply