விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் “கத்தி ” படத்தின் படப்பிடிப்பு தற்போது 80% வரை முடிந்துவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கத்தி படத்தின் பாடல் வெளியீட்டை லண்டனில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் தயாரிப்பாளர், லைக்கா நிறுவனத்தின் அதிபர் என்பதும், அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை தமிழகத்தில் வைக்க வேண்டாம் என்றும், லண்டன் அல்லது டொரண்டோவில் வைக்க வேண்டும் என்பதுதான் படத்தயாரிப்பாளர் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் எடுத்த இந்த முடிவு அவராகவே எடுத்த சொந்த முடிவு அல்ல என்றும், இலங்கை அதிபரின் ஆலோசனையின் பேரில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் லண்டன் ஈழத்தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளனர். லண்டனில் ‘கத்தி’ பாடல் வெளியீட்டு விழா நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்பொழுதே லண்டன் தமிழ் அமைப்புகள் தயாராகி வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி லண்டனில் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. ரிலீஸாகும் நேரத்தில் துப்பாக்கியை விட கத்திக்கு தமிழ் அமைப்புகளால் கடும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.