சென்னையில் உள்ள தாம்பரம் சாலயில் வாகன நெரிசலை குறைக்கும் பொருட்டு மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உயர்மட்ட சாலை அமைக்க, அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று சட்டசபையில் அறிவித்தார்
நேற்று சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கை குறித்த விவாதத்தில் பேசிய அமைச்சர் வைத்திலிங்கம் “சென்னையில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க, மீனம்பாக்கம் அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரையில் உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்த ஆராய்வு அறிக்கை தயாரிக்கப்படும்.
மேலும், திருமழிசை அருகே துணை நகரம் அமைப்பது குறித்து இன்னும் 2 மாதங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை உச்சம்பட்டி அருகே ஒரு துணை நகரம் அமைக்க தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.