பல்கேரிய நாட்டில் ரவிதேஜா, ஹன்சிகா படப்பிடிப்பில் சிக்கல்.

hansika and ravitejaபல்கேரிய நாட்டில் தெலுங்கு படப்பிடிப்பு ஒன்றிற்காக ரவிதேஜா மற்றும் ஹன்சிகா சென்றுள்ளனர். அங்கு ஹன்சிகா மற்றும் ரவிதேஜாவின் டூயட் பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளது.

ரவிதேஜா, ஹன்சிகா, ரெஜினினா நடிக்கும் ‘பவர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தை கே.எஸ்.,ரவீந்திர ரெட்டி இயக்கி வருகிறார். ரஜினியின் ‘லிங்கா’ படத்தை தயாரிக்கும் ராக்லைன் வெங்கடேஷ்தான் இந்த படத்தையும் தயாரிக்கின்றார். ரவிதேஜா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார்.

இந்நிலையில் ஒரு பாடல் காட்சியை படமாக்க ரவிதேஜாவும், ஹன்சிகாவும் படக்குழுவினர்களுடன் சேர்ந்து பல்கேரியா நாட்டிற்கு சென்றுள்ளனர். பல்கேரிய தலைநகர் சோபியா என்னும் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவருக்கும் தனித்தனி அறைகள் படக்குழுவினர்களால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது. ஓய்வு நேரத்தில் இருவரும் ஒரே அறையில் பேசிக்கொண்டிருந்தபோது ஹன்சிகாவின் அறையில் திடீரென அந்நாட்டு விபச்சார தடுப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் உள்ளே வந்து ஹன்சிகாவிடமும் ரவிதேஜாவிடமும் விசாரணை செய்ததாக படக்குழுவினர்களில் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பல்கேரிய நாட்டு சட்டப்படி திருமணம் ஆகாத ஜோடி ஒரே அறையில் தங்குவது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இதனால் இருவரிடமும் போலீஸார் துருவி துருவி விசாரணை செய்ததாகவும், அதன்பின்னர் படக்குழுவினர் விரைந்து வந்து போலீஸாரிடம் தாங்கள் இந்தியாவில் இருந்து வந்த படப்பிடிப்பு குழுவினர் என்று கூறிய பின்னர் போலீஸார் திரும்பி சென்றதாகவும் அந்த டுவிட்டரில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியே கசிந்துள்ளதால் தெலுங்கு படவுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து படக்குழுவினர்களிடம் கேட்டபோது, அப்படி ஒரு சம்பவம் பல்கேரியாவில் நடக்கவே இல்லை என்றும் யாரோ வேண்டுமென்று டுவிட்டரில் புரளியை கிளப்பியுள்ளதாகவும் கூறினர்.

Leave a Reply