உலகின் சிறந்த சுற்றுலாத்தளங்கள் பட்டியல். லண்டன் முதலிடம்

london2014ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத்தலங்கள் பட்டியல் சமீபத்தில் மாஸ்டர்கார்ட் உலக நகரங்கள் இன்டெக்சில் வெளியானது. 4வது ஆண்டு வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் மொத்தம் 132 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் லண்டன் நகரம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு பாங்காக் நகரம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நகரை இரண்டாவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளிவிட்டு இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் பாரீஸ் நகரம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

ஐரோப்பாவின் லண்டன், பாரிஸ், இஸ்தான்புல்(7), பார்சிலோனா(11), ஆம்ஸ்டர்டாம்(12), மிலன்(13), ரோம்(14), வியன்னா(17) என்ற எட்டு நகரங்கள் முதல் 20 இடங்களில் இடம் பிடித்துள்ளன.

பாங்காக், சிங்கப்பூர், துபாய் ஆகிய ஆசிய நகரங்கள் முதல் ஐந்து இடத்திற்குள் உள்ளன.

இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த லண்டன் நகர மேயர் போரிஸ் ஜான்சன் இதுபற்றிக் கூறியபோது, “வரலாறு, பாரம்பரியம், கலை, பாரம்பரியம் என அனைத்து நிகழ்வுகளையும் லண்டன் ஒருங்கிணைக்கின்றது. அதுமட்டுமின்றி இங்குள்ள பச்சைப் புல்வெளிகளும், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் அனைவரும் பொறாமைப் படக்கூடிய வகையில் அமைந்துள்ளன” என்றார்.

Leave a Reply