“மகாத்மா காந்தி கொலை தொடர்பான ஆவணங்கள் உள்பட 1.5 லட்சம் கோப்புகளை நரேந்திர மோடி உத்தரவின்பேரில் மத்திய அரசு அழித்து விட்டது’ என குற்றம் சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பி.ராஜீவ் அவர்களுக்கு நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அவருடைய விளக்கத்தில் “மகாத்மா காந்தி கொலை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளன” என்று கூறினார்.
மோடி அரசு பதவியேற்றதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற11,000 கோப்புகள் மற்றும் காகிதங்களை பிரதமரின் உத்தரவின்பேரில் அழிக்கப்பட்டன.
வேலை செய்யும் அலுவலகத்தில் சுகாதாரத்தைப் பராமரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எடுக்கப்பட்டது என பிரதமர் அலுவலகத்தில் இருந்து அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் ஆவணக் காப்பக விதிமுறைகளுக்கு உள்பட்டு தேவையில்லாத பழைய கோப்புகள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கியமான ஒருசில கோப்புகள் பத்திரமாக உள்ளதாகவும் மத்திய அமைச்சரவைச் செயலர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
எம்.பி. பி.ராஜீவ் குற்றம்சாட்டியதைப் போல் “மகாத்மா காந்தி கொலை தொடர்பான ஆவணங்கள் எதுவும் அழிக்கப்படவில்லை என்றும் அதேபோன்று ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி மற்றும்மௌண்ட் பேட்டன் தொடர்புடையஅனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக உள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
மகாத்மா காந்தி கொலை தொடர்பான 52 கோப்புகள், 67 தொகுப்புகள் மற்றும் 11,186 தாள்கள் ஆகியவை தேசிய ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக உள்ளன என்று அவர் மேலும் மாநிலங்களவையில் கூறினார்.