சென்னை ஸ்டேட் வங்கி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து. கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பல்.

6  சென்னை பாரீஸ் கார்னரில் பீச் ஸ்டேசன் ரயில் நிலையம் எதிரில் உள்ள 200 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடத்தில் பாரத ஸ்டேட் பாங்க் செயல்பட்டு வந்தது. நேற்று  பிற்பகல் 3.45 மணி அளவில் தேவையில்லாத பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இந்த கட்டடத்தின் ஒரு அறையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மேலும் பரவி அக்கட்டடத்தின் 2 மாடிகளுக்கும் பரவியதால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியெ ஓடினர்.

6bஇந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 1.30 மணி நேரம் போராடி தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை இணை இயக்குநர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

6aஸ்டேட் பாங்கில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. மேலும் வங்கியின் உள்ளே வைக்கப்பட்டிருந்த கணினி, அலுவலக பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன. ஆயினும் இந்த விபத்தில் வங்கியில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகள் பாதுகாப்பாக உள்ளதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply