மும்பை தாக்குதல் பயங்கரவாதியுடன் ராம்தேவ் நண்பர் சந்திப்பு. தேசத்துரோகம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

mumbai terroristsமும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபிஸ் சயீத்தை ராம்தேவின் நண்பர் வேத பிரதாப் வைத்திக் சந்தித்துள்ள விவகாரத்தால் அவரை கைது செய்யும்படி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளரான யோகா குரு ராம்தே அவர்களின் நண்பரும் பிரபல பத்திரிகையாளருமான வேத பிரதாப் வைத்திக், கடந்த வாரம் பயங்கரவாதி ஹபிஸ் சயீத்தை சந்தித்து பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு அடைந்துள்ளது. இந்த சந்திப்பை கண்டித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. வேத பிரதாப் வைத்திக்கை கைது செய்ய கோரி டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பிரச்சனையில் ஆளும் பாஜக  அரசு, வேத பிரதாப்புக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இது தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபிஸ் சயீத்துடன் வேத பிரதாப் வைத்திக்கிற்கு தொடர்பு இருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தினர்.

உலகின் பல  நாடுகளால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் தலைவரான இருக்கும் சயீத்தை, வேத பிரதாப் வைத்திக் சந்தித்தது தாய்நாட்டுக்கு செய்யும் தேசத்துரோகம் என்றும் இந்த குற்றத்திற்காக அவர் மீது விசாரணை நடத்தி அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்கவும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் வேத பிரதாப் வைத்திக் அளித்த விளக்கம் ஒன்றில் “பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் தனிப்பட்ட முறையில் ஹபிஸ சயீத்தை தான் சந்தித்ததாகவும், இதற்கும் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1nBf0RD” standard=”http://www.youtube.com/v/uv2ZOHuno0c?fs=1″ vars=”ytid=uv2ZOHuno0c&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7682″ /]

Leave a Reply