உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் அமெரிக்க ராணுவத்தின் பெண்டகன், இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட விரும்புவதாக நேற்று அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்திய ராணுவத்துடன் அமெரிக்க ராணூவம் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக கூறினார்.
இந்த விஷயம் தொடர்பாக இந்திய ராணுவ அமைச்சருடன், அமெரிக்க ராணுவ அமைச்சர் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பிரதமர் மோடி, வரும் செப்டம்பர் மாதம் முதல்முறையாக ஐ.நா.மாநாட்டில் பங்குகொள்ள அமெரிக்கா செல்ல இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை, நேரில் சந்தித்து இதுகுறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது