சட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் 2வது முறையாக கூண்டோடு வெளியேற்றம்.

stalin_1
தமிழக சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

சட்டமன்றத்தில் இன்று மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பேசிய மைலாப்பூர் அதிமுக உறுப்பினர் ராஜலட்சுமி, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களை ஒருமையில் பேசினர். உறுப்பினர் ராஜலட்சுமியின் ஒருசில வார்த்தைகளை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று தி.மு.க உறுப்பினர் துரைமுருகன் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று கூறியதால் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.

இந்த சமயத்தில் அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து உறுப்பினரின் வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சொல்ல திமுக உறுப்பினர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறியதால், மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடனும், சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் இரண்டாவது முறையாக கூண்டோடு வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply