மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. 295 பயணிகள் தீயில் கருகி பலி.

[carousel ids=”37595,37596,37597,37598,37599,37600,37601,37602,37603,37604,37605,37606,37607,37608,37609,37610,37611,37612,37613″]

உக்ரைன் – ரஷ்யா எல்லை அருகே 295 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த மலேசிய விமானம் நேற்று ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் என்ற நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்றுகொண்டிருந்த MH17 என்ற விமானம் நேற்று மாலை உள்நாட்டுப் போர் நடந்து வரும் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப்படையினர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் விமானம் பலத்த சத்ததுடன் வெடித்து தரையில் விழுந்ததாக அங்கிருந்து வரும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் 280 பயணிகளும்,  15 ;விமான ஊழியர்களும் பயணம் செய்து கொண்டிருந்தனர். உக்ரைனின் எல்லையில் இருந்து, ரஷ்ய எல்லைக்கும் விமானம் சென்று கொண்டிருந்த தருணத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக மலேசிய ஏர்லைன்ஸ் கூறியுள்ளது, இந்த தகவலை உக்ரைன் உள்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மலேசிய விமானம் மீது ஏவுகணை வீச்சு சர்வதேச அரசியலில் திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான்  சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு குற்றம் கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கும் உக்ரைன் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ஆயினும் 33000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் அளவுக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களிடம் வசதி இல்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராடார் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஏவுகணைகளோ, விமானத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளோதான் இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய சூழல் குறித்தும், எழுந்திருக்கும் நெருக்கடி குறித்தும் விவாதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை, ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply