மலேசிய விமான விபத்தில் பலியானவர்களின் விபரம்.

malaysia flight MH 17 17உக்ரைன் நாட்டு வான் எல்லையில் மலேசிய விமானம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் பலியான 295 பேர்களின் நாடுகளின் விபரம் தற்போது வெளிவந்துள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக MHG17 என்ற பயணிகள் விமானம், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் என்ற நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டது. அந்த விமானத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 280 விமான பயணிகளும், 15 விமானநிறுவன ஊழியர்களும் இருந்தனர்.

  உக்ரைன் நாட்டு வான் எல்லை பகுதியில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ராடார்‘ கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சிறிது நேரத்தில், விமானம் தீப்பிடித்து வானில் இருந்து துண்டுதுண்டாக நொறுங்கி விழுந்தது

இந்த விபத்தில் எந்தெந்த நாடுகளின் பயணிகள் பலியாகினர் என்ற விபரத்தை மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று காலை அறிவித்தது. அதன்படி 154 பேர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியா-27, மலேசிய-23, இந்தோநேசியா-11, பிரிட்டன்-6, ஜெர்மனி-4, பெல்ஜியம்-4, பிலிப்பைன்ஸ்-3, கனடா-1, ஆகியோர் பலியாகினர். இன்னும் பலியான 50 பயணிகளின் விபரங்கள் தெரியவில்லை அதுகுறித்து விபரங்கள் சேகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply