திருடா திருடி, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு ஜாலியான தனுஷை பார்க்கவேண்டுமானால் வேலையில்லா பட்டதாரி படத்தை பார்க்கலாம்.
வழக்கம்போல வேலையில்லாமல் வெட்டியாக ஊரை சுற்றிவரும் தனுஷ், அப்பா சமுத்திரக்கனியிடம் கேவலமாக திட்டு வாங்குகிறார். வழக்கம்போல ஆதரவு கொடுக்கும் அம்மா சரண்யா, படித்து முடித்தவுடனே நல்ல வேலையில் சேர்ந்து கார் வாங்கி அண்ணன் தனுஷை வெறுப்பேற்றும் தம்பி, இந்த நிலையில் பக்கத்து வீட்டு பெண் அமலாபாலுடன் காதல் என முதல்பாதியில் கதை நகர்கிறது. என்ன நடந்தாலும் டேக் இட் ஈஸி என்ற பாலிஸியை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டும் தனுஷுக்கு இடைவேளைக்கு பின்னர் வேலை கிடைக்கின்றது. ஆனால் அந்த வேலையில் இருந்து தனுஷை விரட்டியடிக்க வில்லன் கோஷ்டி சதியில் ஈடுபட அந்த சதியை தனுஷ் எப்படி முறியடிக்கின்றார் என்பதுதான் கதை.
முதல்பாதியில் படுஜாலியாக இருக்கும் தனுஷ் இரண்டாவது பாதியில் அதற்கு நேர்மாறாக சீரியஸாக மாறுகிறார். வேலைவெட்டி இல்லாத இளைஞராக மிகவும் அசால்ட்டாக நடித்து தள்ளுகிறார் தனுஷ். அப்பா சமுத்திரக்கனியிடம் திட்டு வாங்கும்போது, அம்மா சரண்யாவிடம் பாசத்தை கொட்டும்போதும் காதலியிடம் ஒரு ஓட்டை பைக்கை வைத்துக்கொண்டு பல்பு வாங்குவதும் தனுஷ் செம நடிப்பு.
விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு சென்றுவிட்ட அமலாபாலின் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால்தானோ என்னவோ ரொம்ப டீசண்டாக வருகிறார். கவர்ச்சியில்லாத அமலாபாலை படம் முழுவதும் பார்க்கலாம். தனுஷ் மீது கொஞ்சம் கொஞ்சமாக காதல் வரும் நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
சமுத்திரக்கனியின் இயல்பான தந்தை கேரக்டர், சரண்யாவின் வழக்கமான ஆனால் அருமையான நடிப்பு மற்றும் விவேக் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை மிகச்சரியாக செய்துள்ளனர். பின்பாதியில் உள்ள படத்தின் சீரியஸை குறைக்க விவேக் முயற்சி செய்துள்ளார்.
இரண்டாவது பாதியில் திணறும் திரைக்கதை, எளித்து ஊகித்து விடும் அடுத்து வரும் காட்சிகள், க்ளைமாக்ஸ் ஆகியவை படத்தின் மைனஸ் பாயிண்டுக்கள். தனுஷின் அசத்தலான நடிப்பு, காமெடி வசனங்கள் மற்றும் அனிருத்தின் பாடல்கள் படத்தின் ப்ளஸ் பாயிண்டுக்கள். முதல்பாதியின் ஜாலிக்காகவே ஒருமுறை பார்க்கலாம்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1mZWYYK” standard=”http://www.youtube.com/v/XaqFHiBVbaU?fs=1″ vars=”ytid=XaqFHiBVbaU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4843″ /]