தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக போலி நியமன ஆணையை காட்டி மக்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம் என தென்னக ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென்னக ரயில்வே இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளாவது:
அண்மை காலங்களில் தெற்கு ரயில்வேயின் பெயரை பயன்படுத்தி போலி பணி நியமன ஆணை வழங்கும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை ஒரு சில நபர்கள் தயாரித்து மக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கின்றனர். ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்படும்.
இதனை ரயில்வே தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டு, முறையான தேர்வுகள் மூலம் ரயில்யில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இது குறித்த அறிவிப்புகள் இணையத்தில் வெளியிடப்படும். இதனைக் கண்டு பொது மக்கள் ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். எனவே, தனி நபர் மற்றும் ஏஜென்ஸிகள் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறினால், அவர்களிடம் ஏமாற வேண்டாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.