பரத், சந்தியா நடிப்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய “காதல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபல வில்லன் நடிகர் தண்டபாணி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 61.
நடிகர் தண்டபாணிக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவருடைய உறவினர்கள் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சையின் பலன் இன்றி மரணம் அடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தண்டபாணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். தமிழில் காதல், சண்டைக்கோழி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், உனக்கும் எனக்கும், வட்டாரம் உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடத்துள்ளார். மறைந்த நடிகர் தண்டபாணிக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.