கடந்த வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் MH17ல் பிரபல தமிழ் நடிகை ஒருவர் குடும்பத்துடன் மரணம் அடைந்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
மலேசியாவில் வாழ்ந்து வந்த தமிழ் நடிகை 38 வயதான சுபா ஜெயா, தனது கணவர் மற்றும் ஒருவயது மகளுடன் நெதர்லாந்தில் இருந்து மலேசியாவிற்கு MH17 விமானத்தில் திரும்பி வரும்போது மரணம் அடைந்துள்ளார்.
மலேசிய தமிழ் நடிகை சுபா ஜெயா, ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ்’, ‘டோகாக்’ ஆகிய மலேசிய திரைப்படங்களிலும், ‘சுகமான சுமைகள், போர்பிளே’, ‘சார்லிஸ் ஆன்டி’, ‘ஹங்க்ரி பார் ஹோப் ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நெதர்லாந்தை சேர்ந்த பால்கோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெய் கோஸ் என்ற மகள் இருக்கின்றார்.
நெதர்லாந்தில் உள்ள தனது பெற்றோர்களுக்கு தனது குழந்தையை காட்ட நினைத்த பால்கோஸ், மனைவி, மற்றும் மகளுடன் நெதர்லாந்து சென்றார். அங்கு தனது பெற்றோர்களுடன் ஒருவாரம் இருந்துவிட்டு, மீண்டும் திரும்பி MH17ல் வரும்போதுதான் அந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில் நடிகை சுபா ஜெயா குடுமத்துடன் கொல்லப்பட்டார்.
சுபா ஜெயாவின் மறைவிற்கு, மலேசிய கதாசிரியர், டைரக்டர் காய்ரில் பஹர், இயக்குனர் பாகி ஜெய்னல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.