முன்னாள் நீதிபதியின் சர்ச்சைக்கருத்து. ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்கள் அமளி.

15சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ சமீபத்தில் எழுப்பிய ஒரு சர்ச்சைக்குரிய  விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ராஜ்யசபாவில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ. சமீபத்தில் ஓய்வு பெற்ற இவர் தற்போது இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது, கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால் அந்த நீதிபதிக்கு ஆதரவாக தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு பிரபல கட்சி அப்போதைய மத்திய அரசை வற்புறுத்தி நியமனம் செய்ததாக  குற்றம் சாட்டினார்.

முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதரமற்றது என  காங்கிஸ் தலைவர்களில் ஒருவரான ராஷித் ஆல்வி கூறியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் இன்று ராஜ்யசபாவில் பயங்கர விளைவை ஏற்படுத்தியது மார்கண்ட கட்ஜூ குறிப்பிட்ட கட்சி எது? என்பதை அறிந்து அந்த கட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராஜ்ய சபாவில் அதிமுக மற்றும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக  கூச்சல், குழப்பம் நீடித்ததால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply