நீதியின் கழுத்தை நெரிப்பதாக இருக்கிறது. முன்னாள் நீதிபதி மீது கருணாநிதி குற்றச்சாட்டு

5முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ நீதிபதி நியமன விவகாரத்தில் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து நீதியின் கழுத்தை நெரிப்பதாக உள்ளது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது திமுக மீது முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறிய புகார் சிறிதும் ஆதாரமில்லாதது என்றும், கடந்த 2004ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தை பத்து ஆண்டுகள் கழித்து வெளியிடுவதன் நோக்கம் என்பதை அவர் விளக்க வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

‘நீதிபதிக்கே உண்டான கண்ணியத்தையே மார்க்கண்டேய கட்ஜூ இழந்து விட்டார் என்றும் அவரது கருத்து நீதியின் கழுத்தை நெரிப்பதாக இருக்கிறது என்றும் கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார். ஒரு அரசு ஆட்சியில் இருக்கும்போது பதவியை பெற்று அனுபவித்துவிட்டு அந்த அரசு ஆட்சியில் இருந்து இறங்கியதும் அதன் மீது குற்றஞ்சாட்டுவது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply