கடந்த இரண்டு மாதங்களாக சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை இன்று பிடிபட்டுள்ளது.
சத்தியமங்கலம் அருகே கிராமம் ஒன்றில் பொதுமக்களை சிறுத்தை ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக அச்சுறுத்தி வந்தது. கடந்த ஜூன் மாதம் டிரைவர் ஒருவரையும், அதையடுத்து கடந்த வாரம் ஒரு வனத்துறை அதிகாரி ஒருவரையும் அந்த சிறுத்தை கொன்றதால் பொதுமக்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்காக திம்பம் மலைப்பாதையில் சில கூண்டுகள் வைக்கப்பட்டது. அந்த கூண்டுகளில், ஒரு கூண்டுக்குள் இன்று காலை சிறுத்தை பிடிபட்டுள்ளது. பின்னர் வன அதிகாரிகள் அந்த சிறுத்தை உள்ள கூண்டை பாதுகாப்பாக எடுத்து சென்றனர். இதனால் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.