சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருக்கின்றது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து அசோக்நகர் பகுதி வரை சிக்னல் அமைக்கும்பணி முற்றிலும் முடிவடைந்துவிட்டதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில் பாதைகள் கோயம்பேடு பகுதியில் இருந்து ஆலந்தூர் வரையிலான 11 கி.மீ தூரத்தில் ரயில்பாதை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்து மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. மேலும் ரயில்நிலையங்கள் அமைக்கும் பணிகளும் கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, சிட்கோ ஆகிய பகுதிகளில் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, சிட்கோ ஆகிய பகுதிகளில் சிக்னல்கள் அமைக்கும் பணியும் முழுமையாக முடிந்துவிட்டதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். சிக்னல்கள் அனைத்து கோயம்பேட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கப்படும் என்றும், எல்.சி.டி டிவி மூலம் ரயில்களின் வேகம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.