இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண் குடியிருந்த வீட்டிற்குள் பயங்கரமான மின்னல் ஒன்று தாக்கியது. ஆனால் அந்த பெண் காலில் ரப்பர் செருப்பு அணிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இருப்பினும் அவருடைய வீட்டில் உள்ள முக்கிய பொருட்கள் கடும் சேதம் அடைந்தன.
இங்கிலாந்து நாட்டில் உள்ள வில்ட்ஷையர் என்ற பகுதியில் 49 வயது ஜெனிபர் லையான்ஸ் என்ற பெண் வாழ்ந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் கட்டிலில் உட்கார்ந்து மொபைல் போனை இயக்கிக்கொண்டிருந்த போது, திடீரென 300,000 வோல்ட்ஸ் சக்தி கொண்ட மின்னல் ஒன்று அவருடைய வீட்டின் மேல் இருந்த சாட்டிலைட் டிஷ்ஷை தாக்கியது. இதனால் அவருடைய வீடு முழுவதும் மின்சாரம் தாக்குதலுக்கு உட்பட்டு அவரது வீட்டில் இருந்த அனைத்து மின்சார உபயோக பொருட்களும் வெடித்து சிதறியது.
ஆனால் ஜெனிபரின் கால்கள் தரையில் இருந்தாலும், அவர் தன்னுடைய காலில் ரப்பர் செருப்பு அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். தன்னுடைய உயிரை காப்பாற்றிய ரப்பர் செருப்புக்கு அவர் நன்றி கூறுவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.