இந்து மத மக்களின் புனித நதியாகிய கங்கை நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த நதியின் கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கங்கை நதியின் மொத்த கொள்ளளவான 114 மீட்டரில் தற்போது 113 மீட்டர் வரை தண்ணீர் ஒடுகிறது. இன்னும் ஒரு மீட்டரையும் சில நாட்களில் தொட்டுவிடும் அபாயம் உள்ளதல், கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் நரோரா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கங்கை நதிக்கரையில் உள்ள 30 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதையொட்டி இந்த பகுதியில் வாழ்ந்து வரும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை உ.பி அரசு விடுத்துள்ளது. கங்கை கரையோர மக்களை பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்க அந்த பகுதி மாவட்ட அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் கான்பூர் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அரசு அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கான்பூர் துணை ஆணையர் மற்றும் கான்பூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.