சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்த்துக்கு கிட்னி ஆபரேசன்? திடுக்கிடும் தகவல்

vijayakanthதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வழக்கமான கண்கோளாறுக்காகத்தான் சிங்கப்பூரில் சிகிச்சை நடந்தது என்று அவரது கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் அவரது கிட்னியில் பிரச்சனை இருந்துள்ளது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாததால் செக்கப் செய்ய வந்த விஜயகாந்த்தை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கிட்னியில் பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்தனர். எனவே உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆனால்தான் சிகிச்சையை தொடர முடியும் என அறிவுறுத்தினர். ஆனால் சென்னையில் சிகிச்சை செய்தால் அடிக்கடி யாராவது வந்து தொந்தரவு செய்வார்கள் என்று முடிவு செய்த விஜயகாந்த் உடனடியாக ரஜினியை தொடர்பு கொண்டுஆலோசனை செய்துள்ளார்.

ரஜினிதான் அவருக்கு சிங்கப்பூர் மருத்துவமனை பற்றியும், அங்கு கொடுத்த உயர்வகை சிகிச்சை குறித்தும் விலாவரியாக கூறியுள்ளார். தானே சிங்கப்பூர் மருத்துவமனைக்கு போன் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

ரஜினி கொடுத்த தைரியத்தில்தான் உடனடியாக மனைவி மற்றும் மச்சானுடன் விஜயகாந்த், சிங்கப்பூர் கிளம்பினார். சிங்கப்பூரில் அவருக்கு கிட்னி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் விஜயகாந்த் சென்னை திரும்பிய​போது கட்சியினர் உள்பட யாருக்கும் தகவல் சொல்லாததால், யாரும் அவரை வரவேற்க வரவில்லை. விமானத்தில் இருந்து வீல்சேரில் விஜயகாந்த்தை தள்ளிக்கொண்டு வந்தார்கள். ஒரு போர்வையைப் போத்தியபடி அவர் வீல்சேரில் இருந்ததால் சென்னை விமானநிலையத்தில் யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.”

மேலும் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்தபிறகு விஜயகாந்த் இனிமேல் மதுவகைகளை அருந்தக்கூடாது என்று கண்டிப்பாக அறிவுரை கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply