பாரளுமன்றத்திற்கு ஒழுங்காக வராத பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களின் பட்டியலை தயாரிக்குமாறு பாராளுமன்ற விவகார அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி. எம்.பி.க்களின் வருகைப்பதிவு மிக குறைந்த நாட்களே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. , பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது. இதனால், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம், லோக்சபா, மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு அவைகளுக்கும் கட்சி எம்.பி.க்களின் வருகை பதிவேட்டை உடனடியாக கவனித்து எம்.பிக்களின்ன் வருகை குறித்த அறிக்கையை தனக்கு உடனடியாக தெரிவிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு இதுவரை சரியாக வராத எம்.பிக்களுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுப்பார் என கூறப்படுகிறது.
மேலும் பாஜகவின் அனைத்து எம்.பிக்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் இன்று நடைபெற இருக்கும் பாராளுமன்ற கூட்டத்திற்கு வரவேண்டும் என்று உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு எம்.பிக்கள் உடனடியாக பதிலளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மோடியிடம் இருந்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு எம்.பிக்களுக்கும் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கவும், அதன்மூலம் அவர்களுடைய நடவடிக்கைகளை மோடி நேரடியாக பார்வையிட்டு, அவரகளுடைய செயல்பாட்டில் குறைபாடுகள் இருந்தார் எச்சரிக்கை செய்வார் என்றும் கூறப்படுகிறது.
எம்.பி.க்களின் வருகைப்பதிவேடு மற்றும் செயல்பாடுகள் இவற்றை வைத்துதான் அவர்களுக்கு எதிர்காலத்தில் கட்சியில் நல்லதொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.