மோடிக்கு விசா வழங்க மறுத்த அரசு வேறு. நாங்கள் வேறு. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி

sushma and kerryநரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது விசா வழங்க மறுத்தது அமெரிக்காவின் வேறு அரசு. இப்போது இருக்கும் எங்கள் அரசு அவருக்கு விசா வழங்க தயாராக இருக்கின்றது என இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

முன்று நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த 30ஆம் தேதி இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, நேற்று காலை டெல்லி ஐ.ஐ.டி.யில் நடந்த விஞ்ஞானம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்திய பிரதமருக்கு விசா வழங்க மறுத்த அரசு வேறு, தற்போது இருக்கும் அரசு வேறு. தற்போதைய அமெரிக்க அரசு அவருக்கு விசா வழங்க தயாராக உள்ளது என்று கூறினார். மேலும் அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இந்திய பிரதமர் மோடியும் சந்திக்கும் சரித்திர முக்கியத்துவம் பெற்ற சந்திப்பை பார்க்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம் என்றார்

கூட்டம் முடிந்த பின்னர் ஜான் கெர்ரி இந்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை ஆகியோர்களை சந்தித்து பேசினார்.

Leave a Reply