சூர்யா, சமந்தா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் அஞ்சான் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சிக்கந்தர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சூர்யா, “சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு படவுலகின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, தனக்கான ஒரு திரைக்கதையை தயார் செய்து என்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தார். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்னால் அவருடைய இயக்கத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த வாய்ப்பை இழந்ததற்காக நான் பலமுறை வருந்தியிருக்கிறேன்.
இந்த சிக்கந்தர் விழாவில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் ஒப்பனாக ஒரு உதவியை கேட்க இருக்கின்றேன். அவர் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் பிரமாண்ட திரைப்படமான ‘பாஹுபாலியில் தனக்கும் ஒரு சிறு கேரக்டர் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். ஒரு பெரிய ஹீரோ தன்னிடம் ஒரு சிறு வாய்ப்பை கேட்டது குறித்து ஆச்சரியமடைந்த இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இதுகுறித்து தான் ஆலோசிப்பதாக கூறியுள்ளார்.
ராஜமவுலி தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, தமன்னா, சத்யராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இந்த படம் சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படம் வரும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றது.