இலங்கை அரசின் அதிகாரபூர்வமான இணையதளம் ஒன்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும் பாரத பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் இழிவான கருத்துப்படத்துடன் கூடிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்து தமிழக முதல்வர் அடிக்கடி கடிதம் எழுதுவதை மோடிக்கு தமிழக முதல்வர் காதல் கடிதம் எழுதுவதை போல அடிக்கடி தேவையில்லாமல் கடிதம் எழுதி வருகிறார் என்று விமர்சித்துள்ளது.
தமிழக முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரையும், ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியாகியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
ஜெயலலிதா நிலைமையை புரிந்து கொள்ளாமல் எழுதி வரும் தேவையற்ற கடிதங்களுக்கு தலையாட்டி மோடி அரசு நடனம் ஆடாது என்றும், மோடி அரசு இலங்கையுடன் நல்லுறவையே மேம்படுத்தவே விரும்புவதை இலங்கை அரசும் புரிந்து கொண்டுள்ளது என்றும் கூறியுள்ள அந்த இணையதளம் ஜெயலலிதாவின் தவறான புரிதலின் பேரிலான கடிதத்திற்கு செவி சாய்த்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி நினைத்தால், அது சரியானது அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1zBU5SG” standard=”http://www.youtube.com/v/eNUr5bl-bDc?fs=1″ vars=”ytid=eNUr5bl-bDc&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3728″ /]