ஜெயலலிதா-மோடி அவதூறு செய்தி. மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு.

jaya and modiஇலங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரபூர்வ இணையதளத்தில் ஜெயலலிதாவையும், மோடியையும் இணைத்து அவதூறு செய்தி வெளியிட்டதற்கு மத்திய அரசு இலங்கையிடம் கடும் கண்டனம் தெரிவித்த்தால் நிபந்தனையின்றி இருவரிடம் மன்னிப்பு கேட்பதாக நேற்று இலங்கை அரசு அறிவித்தது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி காதல் கடிதம் எழுதுவது போல இந்திய பிரதமருக்கு மீனவர் பிரச்சனை குறித்து கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாக கருத்துப்படம் கொண்ட அவதூறு கட்டுரை ஒன்றினை இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையதளமான பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளம் வெளியிட்டிருந்தது.

கட்டுரை வெளியான சிறிது நேரத்தில் தமிழக முதல்வர் இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். பாராளுமன்றத்தில் இந்தவிவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கவும் வலியுறுத்தி இரு அவைகளிலும் அதிமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்திய பாராளுமன்றத்தில் இந்தவிஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியதை அறிந்த இலங்கை அரசு உடனடியாக அந்த கட்டுரையையும், படத்தையும் நீக்கிவிட்டது. இருப்பினும் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மத்திய அரசு இலங்கை தூதரிடம் வலியுறுத்தியதால் வேறு வழியின்றி இலங்கை பணிந்தது. நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு அந்த கட்டுரை இலங்கை அரசின் கொள்கையை பிரதிபலிக்கவில்லை என்றும், அது கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து என்றும் விளக்கம் அளித்தது.

Leave a Reply