வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை வேறு வங்கி ஏ.டி.எம்களில் இனி மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே இலவசமாக எடுக்க முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் அவசர பணத்தேவைக்கு வேறு வங்கி ஏ.டி.எம்களில் மாதம் ஐந்துமுறை இலவசமாக பணம் எடுக்கும் வசதியை இதுவரை ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது. இதில் தற்போது மாற்றம் கொண்டு வந்துள்ளது.
இனிமேல் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் வேறு வங்கி ஏ.டி.எம்களில் மாதம் இரண்டு முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் என்றும், அதற்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.20 அவர்களது கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் முன்பு போலவே மாதம் ஐந்து முறை வேறு வங்கி ஏ.டி.எம்.களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த புதிய நடைமுறையால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.