பெரிய செல்வந்தர்கள் தங்கள் கார்களில் வீட்டு வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றை காரில் ஏற்றிக்கொண்டு செல்லும் காட்சியைத்தான் நாம் இதுவரை பார்த்திருக்கின்றோம். ஆனால் பிரேசில் நாட்டில் உள்ள ஒருவர் தன்னுடைய காரில், ஒரு குதிரையை ஏற்றிக்கொண்டு சென்ற காட்சி அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் அந்த குதிரையின் உரிமையாளர் தற்போது சட்டசிக்கலில் சிக்கியுள்ளார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் தான் வளர்த்து வந்த குதிரையை காரினுள் உட்கார வைத்து சாலையில் சென்றுள்ளார். இதை வேறொரு காரில் சென்றவர்கள் ஆச்சரியமாக பார்த்து அந்த காட்சியை வீடியோ எடுத்து யூ டியூப் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை இணையத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரேசில் நாட்டு விலங்குகள் நல காப்பகம் ஒரு சிறிய காருக்குள் அசெளகரீகமான முறையில் குதிரையை ஏற்றிக்கொண்டு சென்றது அந்த விலங்கை கொடுமைப்படுத்துவதற்கு சமம் என்று புகார் அளித்துள்ளது. அந்த குதிரையின் உரிமையாளரை கண்டுபிடித்து எச்சரிக்கை செய்யும்படியும் அந்த காப்பகம் போலீஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. போலீஸார் அவர்களது புகாரை ஏற்றுக்கொண்டு குதிரையை காரில் ஏற்றிக்கொண்டு சென்ற நபரை தேடி வருகின்றனர். நமது வாசகர்களுக்காக காரில் சென்ற குதிரையின் வீடியோ இங்கு பார்க்கலாம்
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1s1jT9C” standard=”http://www.youtube.com/v/ejGycl50P-w?fs=1″ vars=”ytid=ejGycl50P-w&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9257″ /]