தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றதோ அந்த அளவுக்கு தற்போது எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இதன் உச்சகட்டமாக தனுஷ் இன்று காலை கைது செய்யப்பட்டதாக சென்னை முழுவதும் வதந்தி பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தனுஷ், அமலாபால் நடித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடித்துக்கொண்டுவருவது போல போஸ்டர் வெளியானது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அந்த போஸ்டர்களை அகற்ற உத்தரவிட்டது.
இதற்கிடையே தனுஷ், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி குறித்து அவதூறாக வசனம் பேசியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளியின் சார்பில் சட்டபூர்வமான வழக்கு தொடரப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த இரண்டு பிரச்சனைகளால் தனுஷ் இன்று காலை கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் இயக்குனர் வேல்ராஜும் கைது செய்யப்பட்டதாகவும் சென்னை முழுவதும் இன்று காலை முதல் வதந்தி பரவி வருகிறது. இது வெறும் வதந்திதான் தனுஷ் கைது செய்யப்படவில்லை என தனுஷின் உதவியாளர் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். தனுஷ் கைது வதந்தியால் ரஜினிகாந்த் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.