இந்தியாவில் 14,800 கோடீஸ்வரர்கள். உலக அளவில் எட்டாவது இடம்.

global list of multimillionairesஉலக அளவில் பணக்காரர்கள் குறித்த ஒரு சர்வேயின்படி இந்தியா 8வது இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்தம் 14,800 கோடீஸ்வரர்கள் இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

லண்டனில் உள்ள “நியூ வேர்ல்டு வெல்த்” என்ற தனியார் நிறுவனம் உலகில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகளை வரிசைப்படுத்தும் சர்வே ஒன்றை எடுத்தது. இதில் இந்தியாவுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு பின்னால் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசைப்பட்டியல்:

1. அமெரிக்கா    183,500 கோடீஸ்வரர்கள்
2. சீனா                  26,500 கோடீஸ்வரர்கள்
3. ஜெர்மனி          25,400 கோடீஸ்வரர்கள்
4. பிரிட்டன்          21,700 கோடீஸ்வரர்கள்
5. ஜப்பான்            21,000 கோடீஸ்வரர்கள்
6. சுவிஸ்             18,300 கோடீஸ்வரர்கள்
7. ஹாங்காங்     15,400 கோடீஸ்வரர்கள்
8. இந்தியா           14,800 கோடீஸ்வரர்கள்

உலகம் முழுவதும் மொத்தம் 13 மில்லியன் கோடீஸ்வரர்கள் உள்ளதாக இந்தசர்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply