தனியார் கிளப்புகள் மற்றும் மன்றங்கள் ஆகியவற்றில் வேட்டி அணிந்து செல்லும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.
கடந்த மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்க வேட்டி அணிந்து சென்றதால் அவ்ருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்தப் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன்னர் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தனியார் மன்றங்கள் மற்றும் கிளப்புகள் ஆகியவற்றில் வேட்டி அணிந்து செல்லும் வகையில் இந்தக் கூட்டத் தொடரிலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.