நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இந்திய வீரரை பிடித்து சென்ற பாகிஸ்தான் ராணுவம்.

jawan_swept_brking_271x181காஷ்மிர் மாநிலத்தின் நதி ஒன்றில் படகில் சென்று கொண்டிருந்த இந்திய ராணுவ வீரரை எதிர்பாராதவிதமாக வெள்ளம் அடித்து சென்றது. அந்த ராணுவ வீரரை பாகிஸ்தான் ராணுவம் காப்பாற்றி அவரை பாகிஸ்தானுக்கு பிடித்து சென்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள செனாப் நதியில் ரோந்துப் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர் சத்யஷீல் யாதவ் என்பவர், திடீரென பெருக்கெடுத்த செனாப் என்ற நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு அவருடைய கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக சென்றது. பின்னர் அந்த படகு கவிழ்ந்து அவர் நதிநீரில் தத்தளித்தார்.

பாகிஸ்தான் எல்லைக்கு அடித்து செல்லப்பட்ட அவர் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் கரைசேர்ந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் காப்பாற்றி பிடித்து சென்றுள்ளனர். அவரிடம் பாகிஸ்தான் ராணுவத்தினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்திய தரப்பில் இருந்து பி.எஸ்.எஃப் தலைமை அதிகாரி இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் அந்த ராணுவ வீரரை மீட்போம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply