நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர்.

nirmala seetharamanடெல்லி லோக்சபாவில் இன்றைய கேள்வி நேரத்தில் அ.தி.மு.கவை சேர்ந்த .எம்பிக்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழிலேயே பதில் அளித்ததார். இதனால் லோக்சபாவில்  அதிமுக.எம்பிக்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த சில நாட்களாக லோக்சபாவில் அதிமுக எம்.பிக்கள் தமிழில் கேள்வி கேட்பதும், அதற்குரிய அமைச்சர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பதில் சொல்வதுமான வழக்கம் நடந்து வருகிறது. ஆனால் இன்று அதிமுக எம்பி ராதாகிருஷ்ணன் சீனப்பட்டாசுகள் குறித்து தமிழில் கேட்ட கேள்விக்கு வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழிலேயே பதில் அளித்தார். தமிழில் பதில் அளிக்கும் முன்னர் அவர் சபாநாயகரிடம் அனுமதி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

“சீனப்பட்டாசு குறித்து மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடிக்கு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. அக்கடிதத்தின் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நிர்மலா சீதாராமன் தமிழில் பதில் அளித்தவுடன் அதிமுக எம்.பிக்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்தனர். அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆந்திராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி என்றாலும் அவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply