ரஷ்யாவில் நடந்த பயங்கர கார் விபத்து ஒன்றில் காரில் தூக்கியெறியப்பட்ட இரட்டைக்குழந்தைகள் சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்தன. ஆனால் காரை ஓட்டிச்சென்ற அந்த இரட்டைக்குழந்தைகளின் தாயார் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவின் “ஒரேக்கோவோ ஜூயேவோ” என்ற பகுதியை சேர்ந்த ‘யுலியா கிராபொவோ’ என்ற 36 வயது பெண் நேற்று தனது காரில் கணவர் மற்றும் நான்கு வயது இரட்டைக்குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார் வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது திடீரென ஒரு வளைவில் காரை திருப்பினார். அந்த நேரத்தில் எதிரே வந்து கொண்டிருந்த கார் ஒன்று அவருடைய காரின்மீது பயங்கரமாக மோதியது.
இதனால் காரில் இருந்த இரட்டை குழந்தைகள் காரில் இருந்து வெளியே தூக்கியெறியப்பட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு ஒரு சிறுகாயமும் ஏற்படவில்லை. அவருக்கு அவருடைய கணவருக்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. ஆனால் காரை தவறான பாதையில் வளைத்ததாக காரை ஓட்டிச்சென்ற அந்த இரட்டைக்குழந்தைகளின் அதிரடியாக தாய் கைது செய்யப்பட்டார். குழந்தைகளுக்கு எவ்வித காயமும் இன்றி தப்பித்ததாக நிம்மதி அடைந்த யுலியா கிரபோவோ போலீஸார் கைது செய்ததும் மிகுந்த வேதனை அடைந்தார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1mvRVfj” standard=”http://www.youtube.com/v/PANhIIuO0AU?fs=1″ vars=”ytid=PANhIIuO0AU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep7909″ /]