தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் இணையதள சேவையான பிராட்பேண்ட் சேவை அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு பிராட்பேண்ட் சேவைகளை பல தனியார் நிறுவனங்கள் செய்து வந்தாலும், அவற்றின் சேவை மற்றும் சேவைக்கட்டணம் ஆகியவற்றில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில், புதிய பிராட்பேண்ட் சேவை அறிமுகப்படுத்தப்படும் என இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா பார்மஸி, அம்மா தியேட்டர் வரிசையில் அம்மா பிராட்பேண்ட் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது.