இரண்டு நாட்களில் கத்திக்கு எதிராக அதிரடி முடிவு. மாணவர் அமைப்பு.

kaththiவிஜய், சமந்தா நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ‘கத்தி’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளிவர இருக்கும் நிலையில் அந்த படத்தை வெளியிடக்கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை தமிழினத்தை வேரறுத்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த எதிர்ப்பு வலுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜபக்சேவின் நண்பர் தயாரிப்பதால் இந்த படத்திற்கு “நாம் தமிழர்” கட்சியின் நிறுவனர் சீமான் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ‘கத்தி’ படத்தை எதிர்க்க போவதில்லை என சீமான் நேற்று அறிவித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஒருசில தமிழ் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் ரகசிய கூட்டம் போட்டு கத்தி படத்தை எப்படி எதிர்ப்பது என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் கத்தி படம் ரிலீஸாவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கவிருப்பதாகவும், அதை மீறி கத்தி வெளிவந்தால் அந்த படத்தின் திருட்டு டிவிடியை தமிழகம் முழுவதும் இலவசமாக விநியோகம் செய்யும் அதிரடி முடிவை எடுக்க இருப்பதாகவும் மாணவர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

ஆனால் இதுகுறித்து கூறிய மாணவர் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் திருட்டு டிவிடி விநியோகிக்கும் திட்டம் ஒன்றும் இல்லை என்றும், அந்த தகவல் தவறானது என்றும் கூறியுள்ளளார்.  எனினும் இன்னும் இரண்டு நாட்களில் கத்திக்கு எதிராக சில அதிரடி முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply