மனித இடத்தை அச்சுறுத்தி வரும் எபோலா வைரஸ் காய்ச்சலுக்கு முதல் பலியாக ஸ்பெயின் நாட்டின் பாதிரியார் ஒருவர் நேற்று பலியாகியுள்ளார்.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில், கிறிஸ்துவ பேராலயம் ஒன்றில் பணியாற்றி வந்த ஸ்பெயின் பாதிரியார் மிகுவல் பஜாரீஸ் என்பவர் எபோலா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அவர் அவசரமாக ஸ்பெயின் நாட்டிற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எபோலா நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள கார்லோஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாதிரியாருக்கு எபோலாவை கட்டுப்படுத்தும் அமெரிக்க நிறுவனத்தின் இஸட்மேப் என்ற தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது.
இருப்பினும் அந்த தடுப்பு மருந்து பலனிக்கமால் பாதிரியார் மிகுவல் பஜாரீஸ் உயிரிழந்து விட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. எபோலா காய்ச்சல் பாதிப்பால், ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக மிகுவல் பஜாரீஸ் இறப்பு கருதப்படுகிறது.